DB Past Pupils

Through an outstanding alumni network, The Varadarajanpet Don Bosco Society students continue to be part of a vibrant, Supportive community of successful leaders throughout their lives. Students have the opportunity to talk informally with alumni about specific jobs, careers and organizations.

தொன் போஸ்கோ  மாணவர்கள் இயக்கம், தங்கள் பள்ளியில் பயின்ற வெற்றிகரமான  துடிப்பான முன்னாள் மாணவர்கள் , தான் பயின்ற பள்ளிக்கு ஆதரவாகவும், சலேசியத்தின் அங்கமாகவும் தொடர்கின்றனர்.  வேலை வாய்ப்புகள், தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றி முன்னாள் மாணவர்களுடன் , பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கலந்துரையாட வாய்ப்புகள் உள்ளது. 

DB Past Pupils முன்னாள் மாணவர் இயக்க அறிக்கை (01.06.2021 முதல் 12.11.2022)

தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம், வரதராஜன்பேட்டை
முன்னாள் மாணவர் இயக்க அறிக்கை (01.06.2021 முதல் 12.11.2022)
24-09-2022
வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும்,சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான முனைவர். R.இரமேஷ் அவர்கள் சிறந்த நாட்டுத் நலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் விருதை இந்திய குடியரசுத் தலைவர் அவர்களிடம் பெற்றுள்ளார். அன்னாரின் பணிசிறக்க தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
24-09-2022
1050 மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு.
கடந்த ஜுலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் நண்பர்களின் உதவியுடன் வரதராஜன் பேட்டை, தென்னூர் மற்றும் நெட்டலக்குறிச்சி பகுதிகளில் புங்கன், பாதாம், புளி மற்றும் குல்பர்கா ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
05-09-2022

தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது எம் பள்ளியின் தலைமையாசிரியர் அருள்திரு. செபஸ்தியான் ஜேக்கப் ச.ச அவர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னார் அவர்களுக்கு தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக அன்பளிப்பு வழங்கினோம். மேலும் அருள்தந்தை அவர்கள், எம் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் நாங்கள் பெருமை அடைகின்றோம்.

24-08-2022
இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவது மட்டும் எங்களது பணி அல்ல . நடப்பட்ட கன்றுகளை பாதுகாப்பதும் முன்னாள் மாணவர் இயக்கத்தின் தலையாகிய பொறுப்பாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அருள்தந்தை மரிய ஆரோக்கியம் கனகா ச.ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை பார்வையிட்டோம் .
28-08-2022
மிகப்பெரும் கார் நிறுனங்களில் வடிவமைப்பில் பல சாதனைகளையும்,விருதுகளையும் பெற்று , இன்று அசோக் லைலண்ட் நிறுவனத்தின் துணை தலைவராகவும், உலக அளவில் நடைபெறும் வாட்டர் கலர் பெயிண்டிங் துறை போட்டிகளில் மிக உயரிய விருதுகளை பெற்று சிறந்த ஓவியராகவும், ஒளி வீசி வரும், அருமை சகோதரர் திரு. சத்தியசீலன் அவர்களின் திறமையை பாராட்டி உலக அளவில் பகழ்பெற்ற இந்தியாவின் DESIGN INDIA தனது மாத இதழில் அட்டைப் படத்தில் அண்ணனின் புகைப்படத்தையும், அவரின் திறமையான செயல்களை சிறந்த முறையில் Cover Story ஆக வெளியிட்டு பெருமை அடையச் செய்துள்ளது. அன்னார் அவர்களை தள இயக்கப் பொறுப்பாளர் அவர்களின் தலைமையில் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வந்தோம்.
19.06.2021
          எம் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. அந்தோணி ஜோசப் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இயேசுவின் இரவு உணவு முப்பரிமாண சுரூபமானது, தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் இருந்து பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு, புனித அலங்கார அன்னை பேராலயத்தில் திருப்பலியின் போது காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த சுரூபமானது, புதுப்பிக்கப்பட்டு புனித அலங்கார அன்னை பேராலய திருப்பலி பீடத்தில் நிறுவப்பட்டது. ரூபாய். 2,00,000/- மதிப்புள்ள இந்த இயேசுவின் இரவு உணவு முப்பரிமான சுலபமானது இலவசமாக பங்கு பேராலயத்திற்கு எம் பள்ளியின் முன்னாள் மாணவர் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் தள இயக்க பொறுப்பாளர் தந்தை , செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டோம்
26-12-2021
வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ பள்ளிக்கு ஓர் பொன்னாள்...
பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்க பொன்விழா ஆண்டு நிகழ்வுகள்...

1.இன்றைய தமிழக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று திறம்பட செயலாற்றி வரும் மண்ணின் மைந்தர் அருமை சகோதரர் மாண்புமிகு. எஸ்.எஸ் அவர்கள் தன்னை இந்நநிலைக்கு உயர்த்திய பள்ளியை மறக்காமல் பள்ளியின் முகப்பில் உள்ள புனித தொன் போஸ்கோ திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி விழா நிகழ்வுகளில் பங்கேற்றார்.

2.அருகில் உள்ள அய்யப்பன் நாயக்கன் பேட்டை என்ற குக்கிராமத்தில் இருந்து இதே பள்ளியில் பயின்று பலதடைகளை கடந்து தனது விடா முயற்ச்சியால் I.A.S. தேர்வில் வெற்றி பெற்று இமாசல பிரதேத்தில் மாநில ஆட்சிப்பணி மற்றும் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து இன்று மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசின் தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநராக பணியாற்றி வரும் திரு.R.செல்வம் I.A.S. அவர்கள் கலந்து கொண்டு தனது பள்ளி பருவ நிகழ்வுகளை நினைவூட்டியது மட்டுமல்லாமல் தன்னை போன்ற. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த அனைவரையும் சாதனையாளர்களாக ஆக்க தூண்டும் தான் எழுதிய ''பனையடி" என்ற நாவலை விழா மேடையில்வெளியிட்டார்.

3.ஜெயங்கொண்டத்திலிருந்து சிறு வயது முதலே இப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று பல இளைஞர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் IIT -யில் இடம் பிடித்து உலக அளவில் பெயர் பெற்ற OPAL போன்ற கார்களின் வடிவமைப்பை சிறப்பாக செய்து பல முன்னனி கார் நிறுவனங்களின் பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்று கடந்த சில ஆண்டுகளாக சென்னையின் மிகப்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லைலாண்ட்டில் பொது மேலாளராக பணியாற்றி வரும் பன்முகதிறன் படைத்த திரு.சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு தனது பள்ளிப் படிப்பில் ஓவியத்தில் ஏற்பட்ட நாட்டத்தாலும் பயிற்றுவித்த அன்றைய ஓவிய ஆசிரியராலும் இன்றளவில் உலக அளவில் தனது வாட்டர் பெயிண்ட் ஓவியங்கள் பல பரிசுகளை பெற்று வருவதையும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

4. இதே பள்ளியில் பயின்று சலேசிய குழுமத்தில் பணிசெய்தும் இன்றைய தமிழ்நாடு அரசுபணி தேர்வாணையத்தின் ( TNPSC )  உறுப்பினராகவும்  நியமிக்கப்பட்டுள்ள அருள்தந்தை ஆரோக்கியராஜ் ச.ச அவர்களும் கலந்து கொண்டு பள்ளியின் கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

5.மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அருமை சகோதரர். க.சொ.க.கண்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொண்டார். மேலும் இந்த பள்ளியில் பயின்ற எண்ணற்ற மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். திருச்சி சலேசிய மாநில தலைமை தந்தை அவர்களும் பொருளர் தந்தை அவர்களும் பள்ளியின் தாளாளர் மற்றும் இல்லத்தந்தை , தள இயக்க பொறுப்பாளர் தந்தை மற்றும் இப்பள்ளியில் பயின்ற அருள்தந்தையர்கள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

11-09-2021
இரத்ததானமுகாம்:

தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் கும்பகோணம் மறை மாவட்ட இளைஞர் இயக்கம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் வரதராஜன் பேட்டையில் நடைபெற்றது.                        இதில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர் பெரியோர் இரத்ததானம் வழங்கினர். கும்பகோணம் மறை மாவட்ட இளைஞர் இயக்க பொறுப்பாளர் அருள்திரு ஜான் போஸ்கோ, முன்னாள் மாணவர் இயக்க பொறுப்பாளர் தந்தை அருள்தந்தை செபாஸ்டின் ஜேக்கப், இளையோர் இயக்க பொறுப்பாளர்                        அருள்தந்தை. செபாஸ்டின் அருண் ச.ச முன்னாள் மாணவர் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

17-07-2021
நமது வரதை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான மாண்புமிகு எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நடும் விழா மற்றும் கோவிட்19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா.

தொன்போஸ்கோ மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சருமான மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தலைமையில்                     17-07-2021 அன்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கிவைத்தார். பள்ளித் தாளாளர் அருள்திரு. பிரான்சிஸ் கமாலியேல் ச.ச அவர்கள் வரவேற்றார். பள்ளியின் சார்பில் இல்லத்தந்தை அவர்களும் , முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் தலைவர் திரு. சேவியர் அமல்ராஜ் அவர்களும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், கையுறைகள், கிருமி நாசினி, சோப் பொருட்களை வழங்கினார். அமைச்சர் தமது உரையில் ”தாம் படித்தப் பள்ளி நிகழ்வில் கலந்து கலந்து கொண்டது பெரும் மகிழ்வு அளிக்கிறது. பள்ளியில் கற்ற பல பண்புகள் இன்றும் தம்மை வழிநடத்துவதாக கூறி மகிழ்ந்தார்.” இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் அருள்திரு. செபஸ்தியான் ஜேக்கப் ச.ச , பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. உஷா, கிராம முக்கியஸ்தர்கள், முன்னாள் ஆசிரியர்கள், இன்னாள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

26-06-2022
கிரிக்கெட் போட்டி
ஆடுங்கள் பாடுங்கள் பாவம் மட்டும் செய்யாதீர்கள் நீ இளைஞன் அது போதும் நான் உன்னை அன்பு செய்யஎன்பார் தொன்போஸ்கோ. எம் சுற்று வட்டார பகுதி இளைஞர்களை ஒன்று திரட்டும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. புது முயற்சியாக கிரிக்கெட் பந்து ( Stretching Ball)  பயன்படுத்தப்பட்டது. பல அணிகள் விளையாட்டில் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூபாய் 15,000-மும் ,இரண்டாவது பரிசாக ரூபாய் 12000, மூன்றாவது பரிசாக ரூபாய் 10000 நான்காவது பரிசாக ரூபாய் 8000 வழங்கப்பட்டது. இப்போட்டியினை தொடங்கும் போதும் பரிசளிப்பு விழாவின் போதும் தாளாளர் மற்றும் இல்லத்தந்தை அவர்களும், பள்ளியின் த இயக்க பொறுப்பாளர் தந்தை அவர்களும் லேசிய அருள் தந்தையர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினர்.
06-11-2021
டி என் பி எஸ் சி (TNPSC) தேர்விற்கு தயாராகும் வரதையை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எம் பள்ளியில் வெற்றி பெற்று தற்போது அதிகாரியாக பணிபுரியும் முன்னாள் மாணவர் திரு.கண்ணப்பராஜ் அவர்களின் மூலம் கருத்தரங்க நிகழ்ச்சியும் ,தேர்விற்கு எவ்வாறு தயாராவது போன்ற விளக்கங்களும் வழங்கப்பட்டது.
16-08-2022
எம் பள்ளியில் பயின்று கல்வி படிப்பினை முடித்து (2021-2022) மேற்கல்விக்கு செல்லும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் இயக்கத்தின் சார்பாக சான்றிதழ்காண பைல் (Certificate File) வழங்கப்பட்டது.
13-10-2022
8 வது முன்னாள் மாணவர் இயக்க தேசிய காங்கிரஸ்
முன்னாள் மாணவர் இயக்க தேசிய காங்கிரஸ் கூட்டமானது 13. 10. 2022 முதல் 15. 10. 2022 வரை ஷில்லாங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தொன்போஸ்கோ மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவ  வரதராஜன் பேட்டை செபாஸ்டின் ஜேக்கப் ச.ச தள இயக்க பொறுப்பாளர் தந்தையின் தலைமையில் 10 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டோம். 10-10-2022 அன்று தள இயக்கத்தில் இருந்து புறப்பட்டு, சண்டிகர், குலுமனாலி, பஞ்சாப் உள்ள ஜாலியன் வாலாபாக், அமிர்தசரஸ், வாகா பார்டர் மற்றும் டெல்லியில் உள்ள குதுப்பினார், லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட் போன்ற வரலாற்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு மகிழ்ந்தோம். அதன் பின் கௌகாத்தி சென்று   13- 10- 2022 அன்று ஷில்லாங் சென்றோம். காலை திருப்பலி நடைபெற்றது.
முன்னாள் மாணவர் இயக்க கொடி ஏற்றப்பட்டு 8 வது முன்னாள் மாணவர் இயக்க தேசிய காங்கிரஸ் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ஷில்லாங் முன்னாள் மாணவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இயக்க தலைவர் திரு வலேரியன் பக்மா அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வில் அருள்தந்தை. பால் ஒல்பின்ரோ லிங்காட், மாநில தந்தை ஷில்லாங், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், தேசிய, மாநில தள இயக்க அருள் தந்தையர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாநில முதன்மை செயலர் கலந்து கொண்டார். மேலும் மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்களும் கலந்து கொண்டார்கள் சிறப்பு விருந்தினர் அவர்களின் உரையில் ”சமுதாயத்திற்கு திரும்ப கொடுக்க திட்டமிடுங்கள் என்றும் பள்ளிகளை தத்தெடுத்து சிறந்த கல்வியினை வழங்குவதோடு மட்டுமல்லாமல் திறன் வளர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும் என்றும், பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் குறிக்கோளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.” பின்னர் தேசிய முன்னாள் மாணவர் இயக்க பொறுப்பாளர் தந்தை அருள்திரு. ஜோசப் மணிபாதம் அவர்கள் மைக்கேல் ஜோர்தான் கதை மூலமாக சிறந்த கருத்தினை வழங்கினார்.
ஷில்லாங் மாநில துணை தந்தை அவர்கள் முன்னாள் மாணவர்கள் நான்கு விதமாக உள்ளனர் என்றும் அவர்கள் 1.default, 2.blessing and grateful one, 3.blessing and committed, 4.project of life என்று விளக்கம் அளித்தார்கள். நன்றியுரை அருள்திரு. ஜோசப் மாநில பொறுப்பாளர் தந்தை அவர்கள் வழங்கினார்கள். மதிய உணவு இடைவெளிக்கு பிறகு தொன்போஸ்கோ கல்லூரிக்கு சென்று வட மாநில மக்களின் பிரதான கலாச்சாரங்கள் பொருட்களை கண்டுபிடித்தோம்.
மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் அவர்கள் மேதகு.கான்ராட் காங்கல் சங்மா அவர்கள் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கியதோடு சலேசியர்களால் அம்மாநிலம் அடைந்த வளர்ச்சியையும், அவரது தந்தைக்கும் சலேசியர்களுக்கும் உள்ள தொடர்பையும் விளக்கினார்கள்.
மறுநாள் 14- 10- 2022 அன்று காலை பேராயர் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றனர். ஒவ்வொரு மாநில முன்னாள் மாணவர் செயலர்கள் தங்களுக்கான அறிக்கையினை சமர்ப்பித்தனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எட்டு தலைப்புகளில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கான கருத்துக்களை வழங்கினர். பின்னர் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக வழங்கப்பட்டது. மாலை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
15- 10- 2022 அன்று காலை திருப்பலி நடைபெற்றது பின்னர் சிறப்பு சுற்றுலா சிரபுஞ்சி                      சென்றோம் . மேலும் அனைவரும் பத்திரமாக 16- 10- 2022 அன்று இரவு 9 மணி அளவில் வீடு திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்கு பலவகையில் ஒத்துழைப்பு வழங்கி நம்மை வழி நடத்திய அருள்திரு. செபாஸ்டின் ஜேக்கப் தள இயக்கப் பொறுப்பாளர் தந்தை அவர்களுக்கும், ஏற்பாடுகளை சிறப்பாக செய்த திரு சேவியர் அமல்ராஜ் தலைவர், முன்னாள் மாணவர் இயக்கம் வரதராஜன் பேட்டை மற்றும்                                                                             திரு .சி .ஆரோக்கியசாமி பொருளர் முன்னாள் மாணவர் இயக்கம் வரதராஜன்பேட்டை அவர்களுக்கும் செயற்குழு உறுப்பினர்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்றுவர ஊக்கமளித்து ஆதரவு வழங்கிய அருள் தந்தை அகிலன் திருச்சி சலேசிய மாநில தந்தை மற்றும் அருள் தந்தை பிரான்சிஸ் தாளாளர் மற்றும்                             இல்லத்தந்தை, சலேசிய தந்தையர்களுக்கு  முன்னாள் மாணவ இயக்க சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
முன்னாள் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு மையம் ரூபாய் 25 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது .அதனை ஜனவரி 26 அன்று திறக்கலாம் என்று முன்னாள் மாணவ இயக்க செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் தேவசகாயம் மற்றும் திருவாளர் அந்துவான் சேவியர் அவர்கள் ஒவ்வொரு கல்வியாண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, சிறப்பு செய்து வருகின்றார்கள். இந்த ஆண்டும் இரண்டு நபர்களின் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
எம் பள்ளி முன்னாள் மாணவர் , பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கி மாணவரது கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக வழங்கியுள்ளார்கள்.
வரதை தள இயக்கத்தில் 170 ஆயுட்கால உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
இவண்,
செயலர், தொ.மு.மா.இயக்கம்

DB Past Pupils முன்னாள் மாணவர் இயக்க அறிக்கை (01.06.2022 முதல் 26.01.2023)

தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம், வரதராஜன்பேட்டை
முன்னாள் மாணவர் இயக்க அறிக்கை
26-06-2022
கிரிக்கெட் போட்டி:”ஆடுங்கள் பாடுங்கள் பாவம் மட்டும் செய்யாதீர்கள்” ”நீ இளைஞன் அது போதும் நான் உன்னை அன்பு செய்ய” என்பார் தொன்போஸ்கோ. எம் சுற்று வட்டார பகுதி இளைஞர்களை ஒன்று திரட்டும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. புது முயற்சியாக கிரிக்கெட் பந்து ( Stretching Ball)  பயன்படுத்தப்பட்டது. பல அணிகள் விளையாட்டில் கலந்து கொண்டனர். இப்போட்டியினை தொடங்கும் போதும் பரிசளிப்பு விழாவின் போதும் தாளாளர் மற்றும் இல்லத்தந்தை அவர்களும், பள்ளியின் தள இயக்க பொறுப்பாளர் தந்தை அவர்களும் சலேசிய அருள் தந்தையர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினர்.
24-08-2022 இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவது மட்டும் எங்களது பணி அல்ல . நடப்பட்ட கன்றுகளை பாதுகாப்பதும் முன்னாள் மாணவர் இயக்கத்தின் தலையாகிய பொறுப்பாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அருள்தந்தை மரிய ஆரோக்கியம் கனகா ச.ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை பார்வையிட்டோம் .
28-08-2022 மிகப்பெரும் கார் நிறுனங்களில் வடிவமைப்பில் பல சாதனைகளையும்,விருதுகளையும் பெற்று , இன்று அசோக் லைலண்ட் நிறுவனத்தின் துணை தலைவராகவும், உலக அளவில் நடைபெறும் வாட்டர் கலர் பெயிண்டிங் துறை போட்டிகளில் மிக உயரிய விருதுகளை பெற்று சிறந்த ஓவியராகவும், ஒளி வீசி வரும், அருமை சகோதரர் திரு. சத்தியசீலன் அவர்களின் திறமையை பாராட்டி உலக அளவில் பகழ்பெற்ற இந்தியாவின் DESIGN INDIA தனது மாத இதழில் அட்டைப் படத்தில் அண்ணனின் புகைப்படத்தையும், அவரின் திறமையான செயல்களை சிறந்த முறையில் Cover Story ஆக வெளியிட்டு பெருமை அடையச் செய்துள்ளது. அன்னார் அவர்களை தள இயக்கப் பொறுப்பாளர் அவர்களின் தலைமையில் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வந்தோம்.
05-09-2022           தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது எம் பள்ளியின் தலைமையாசிரியர் அருள்திரு. செபஸ்தியான் ஜேக்கப் ச.ச அவர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னார் அவர்களுக்கு தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக அன்பளிப்பு வழங்கினோம். மேலும் அருள்தந்தை அவர்கள், எம் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் நாங்கள் பெருமை அடைகின்றோம்.

24-09-2022 வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும்,சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான முனைவர். R.இரமேஷ் அவர்கள் சிறந்த நாட்டுத் நலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் விருதை இந்திய குடியரசுத் தலைவர் அவர்களிடம் பெற்றுள்ளார். அன்னாரின் பணிசிறக்க தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

30-09-2022
1050 மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு.கடந்த ஜுலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் நண்பர்களின் உதவியுடன் வரதராஜன் பேட்டை, தென்னூர் மற்றும் நெட்டலக்குறிச்சி பகுதிகளில் புங்கன், பாதாம், புளி மற்றும் குல்பர்கா ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
16-08-2022
                    எம் பள்ளியில் பயின்று கல்வி படிப்பினை முடித்து (2021-2022) மேற்கல்விக்கு செல்லும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் இயக்கத்தின் சார்பாக சான்றிதழ்காண பைல் (Certificate File) வழங்கப்பட்டது.
13-10-2022 முன்னாள் மாணவர் இயக்க 8 வது தேசிய காங்கிரஸ் கூட்டமானது 13. 10. 2022 முதல் 15. 10. 2022 வரை ஷில்லாங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தொன்போஸ்கோ மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவ வரதராஜன் பேட்டை செபாஸ்டின் ஜேக்கப் ச.ச தள இயக்க பொறுப்பாளர் தந்தையின் தலைமையில் 10 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டோம்.
26-01-2023 முன்னாள் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு மையம் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டுமான பணி நடைபெற்று ஜனவரி 26 அன்று திறக்கப்பட்டது.  முன்னாள் மாணவர் பொன்விழா நினைவு கட்டிட திறப்பு விழாவிற்கு திருச்சி சலேசிய மாநில தலைவர் அருள்திரு. அகிலன் சற்பிரசாதம் சச அவர்கள் தலைமை தாங்கி புனிதப்படுத்தி திறந்து வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு .க.சொ. க. கண்ணன் M.B.A. அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.. சிறப்பு அழைப்பாளராகவருகை புரிந்த சென்னை அசோக் லலேண்ட் துணைத் தலைவரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான திரு .ஏ. சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டு இந்த மாபெரும் பணியை நிகழ்த்த துணை நின்ற ஒவ்வொருவரையும் பாராட்டினார்கள்.
06-08-2023 டாக்டர் தேவசகாயம் மற்றும் திருவாளர் அந்துவான் சேவியர் அவர்கள் ஒவ்வொரு கல்வியாண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, சிறப்பு செய்து வருகின்றார்கள். இந்த ஆண்டும் இரண்டு நபர்களின் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.எம் பள்ளி முன்னாள் மாணவர் , பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கி மாணவரது கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக வழங்கியுள்ளார்கள்.
வரதை தள இயக்கத்தில் 170 ஆயுட்கால உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
இவண்,
செயலர், தொ.மு.மா.இயக்கம்

Contribution

Join us in giving back to the alma mater. Make a significant contribution to The Varadarajanpet Don Bosco Society and leave your footprint in time by assisting present The Varadarajanpet Don Bosco Society in research projects, funding events, instituting scholarships, counselling and providing job assistance. Support, inspire and shape the future of young The Varadarajanpet Don Bosco Society students and future leaders.

DB Past Pupils Council Members

S.NO DESIGNATION NAME
1 LOCAL DELEGATE Rev.Fr.Sebastian Jacob SDB   Headmaster
2 PRESIDENT Mr.A.Xavier Amalraj
3 VICE-PRESIDENT
( Senior )
Mr.D.John Peter
4 VICE-PRESIDENT
( Gex )
Mr.A.Micheal raj
5 SECRETARY Mr.A.Agavalan Jesuraj
6 TREASURER Mr.C.Arockiasamy
7 COUNCIL MEMBERS Mr.S.Pankiras

Mr.Henry 

Mr.Alphonse

Mr.Arul Joseph

Mr.John Joseph Jolly

Mr.N. Arockiadoss

Mr.Arockiaraj

Fill Your Alumni Network Form





we'll one over 30 Years of experience you always the best guidance

GET STARTED